மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக விஜய் பிரபாகரன் விஜய்க்கும்- விஜயகாந்த்திற்கும் இடையே உள்ளது நட்பு என்றும் வரும் ஜனவரி மாதம் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது அவர்களுடைய உள் கட்சி விவகாரம். அதில் கருத்து சொன்னால் தவறாக இருக்கும். விஜய்க்கும் விஜயகாந்துக்கும் இடையே மிகப்பெரிய அளவில் நட்பு இருந்தது.
அதைத்தான் விஜய் தன்னுடைய மாநாட்டில் வெளிப்படுத்தினார். அதனால் விஜயகாந்த் ரசிகர்கள் அவருக்கு என்னால் சென்று விட மாட்டார்கள். விஜயகாந்த் ரசிகர்கள் அந்த அளவிற்கு முட்டாள்கள் இல்லை. அவர்கள் கேப்டன் பின்னால் தான் நிற்பார்கள். தற்போதைக்கு நாங்கள் மக்களோடு தான் கூட்டணியில் உள்ளோம். வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் மாநாட்டில் தேமுதிகவின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
