#BREAKING: நயினார் நாகேந்திரனுக்கு செலக்டிவ் அம்னீசியாவா…? டிடிவி தினகரன் தாக்கு..!!

By Soundarya on புரட்டாதி 7, 2025

Spread the love

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் NDA கூட்டணியை சரியாக கையாளவில்லை. தமிழ்நாட்டின் மனநிலை நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை. பிரதமர் மோடிக்காகத் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தேன். அகங்காரத்தில் பேயாட்டம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப் பிடித்ததுதான் அமமுக NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம்.

எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித் ஷா ஒருபோதும் கூறவில்லை, அதிமுகவில் இருந்து ஒருவர்தான் முதல்வர் என்றுதான் கூறினார். அமித்ஷா அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். அதை மறுக்கும் நயினார் நாகேந்திரனுக்கு செலக்டிவ் அம்னீசியாவா? என்று தெரியவில்லை” என்று பேசியுள்ளார்.