2023 அக்டோபர் முதல் 2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டது. மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ₹ 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 96 சதவீதம் , பின்னர் திரும்ப வந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ₹ 3.56 லட்சம் கோடி மொத்த மதிப்புள்ள ₹ 2,000 ரூபாய் நோட்டுகளில், ₹ 3.42 லட்சம் கோடி திரும்ப வந்துள்ளதாகவும் , செப்டம்பர் 29, 2023 அன்று வணிகம் முடியும் போது ₹ 0.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் இருப்பதாகவும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புழக்கத்தில் இருந்தவற்றில் ₹5,956 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. எனவே உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் சென்று அங்கே கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி சென்னை RBI அலுவலகம் மற்றும் தபால் நிலையத்திலும் மாற்றலாம்.
