தெருவில் முடியை இழுத்து சண்டை போட்ட பெண்கள்.. சுற்றி நின்று விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்.. வைரலாகும் வீடியோ..!!

By Divyamayakannan on புரட்டாதி 6, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம், மஹ்பூபாபாத்  நகரில் யூரியா [உரம்] மூட்டைகளுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். திடீரென்று இரண்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உர மூட்டைகளை வாங்க ஆதார் அட்டை நகலுடன் நின்று கொண்டிருந்த விவசாயிகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இந்த இரண்டு பெண்களுக்குள் வாக்குவாதம் மீறி கைகலப்பாக மாறியது. பின்பு இருவரும் முடியை மாறிமாறி பிடித்து இழுத்து தெருவிலேயே சண்டை போட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து அங்கு இருந்த ஆண்கள் இருவரையும் பிரித்து சமாதானம் படுத்தினர்.

அங்கிருந்த சில இளைஞர்கள் கைதட்டி விசில் அடித்து உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி உள்ளனர். சம்பவம் குறித்த தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, யூரியா இருப்பு உள்ள போதிலும் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் இது போன்ற சலசலப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று பதில் அளித்துள்ளார். யூரியா வழங்க தவறியதால் மற்றும் தேவையானபடி யூரியா இல்லை என்ற ஆங்காங்கே தெலுங்கானாவில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது.