யார்கிட்டேயும் ஒரு ரூபாய்கூட வாங்கல… நான் கஷ்டப்பட்டு உழைச்ச காசுல உதவி பண்றேன்… KPY பாலா பதிலடி..!!

By Soundarya on புரட்டாதி 6, 2025

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார். அடுத்து சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் KPY பாலா. இவ்வாறு தொடர்ந்து தினம்தோறும் பல சேவைகளை பாலா செய்து வருகிறார்.

தற்போது KPY பாலா இப்போது ஒரு இலவச மருத்துவமனை கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இவருடைய காந்தி கண்ணாடி படம் வெளியானது. இந்நிலையில் யாரோ ஒருவரின் பணத்தில் பாலா உதவி செய்வதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கு பதிலளித்த அவர்,” இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் ஒரு ரூபாய்கூட வாங்கி உதவி பண்ணல. இரவு பகலா கஷ்டப்பட்டு உழைச்சு சொந்தக்காசுலதான் பண்றேன்” என்று கூறியுள்ளார்.