“ஸ்ட்ராங்கான பெர்ஃபியூம் யூஸ் பண்ண கூடாது…” ஜப்பானின் ரூல்ஸ்… சென்னை பெண் வெளியிட்ட ஆச்சரிய தகவல்….!!!

By Srimathi on புரட்டாதி 6, 2025

Spread the love

ஜப்பானில் வாழ்ந்து வரும் அனுஷா (இந்திய பெண்), தனது சக பணியாளர் ஒருவரிடம் இருந்து புதிய விஷயத்தை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அனுஷாவுடன் பணி புரியும் பணியாளர், அனுஷாவின் பெர்ஃபியூம் ஸ்ட்ராங்காக இருப்பதாக தெரிவித்துள்ளார். விஷயம் என்னவென்றால், ஜப்பானில் ஸ்ட்ராங்கான பெர்ஃப்யூம் பயன்படுத்துவது harassment கருதப்படுமாம். அதற்கு sumehara என்னும் பதமே உள்ளது.

அதிகப்படியான வாசனை கொண்ட பெர்ஃபியூமை பயன்படுத்துவது, சுய சுத்தம் சரியாக இல்லாததால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது, புகைப்பிடித்து அருகில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது, முதலான விஷயங்களுக்கு sumehara என்ற அழைக்கப்படுமாம். ஜப்பான் அலுவலகங்களில் அதிகப்படியான வாசனை கொண்ட பெர்ஃப்யூம் உபயோகிப்பது, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது போன்ற விஷயங்களால் சகப் பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதுண்டாம். இப்படி ஒரு புது விஷயத்தை ஜப்பானில் கற்று கொண்டேன் என்று அனுஷா தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் ஜப்பானுக்கு வந்தால் இந்த விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.