அடப்பாவி, இப்படியா பண்ணுவ?… விடிஞ்சா திருமணம், முந்தைய நாள் இரவே மணமகளுக்கு ஷாக் கொடுத்த மணமகன்…!

By Nanthini on புரட்டாதி 6, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒரு இளம் பெண்ணுக்கும் கேரள மாநிலம் பலராமபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்தின் முந்தைய நாளில் பெண் வீட்டார் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மணப்பெண் வீட்டார் மறுநாள் நடைபெற இருந்த திருமணத்துக்காக தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இரவு மணமகனின் உறவினர்கள் செல்போன் மூலமாக பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளனர். அதேசமயம் மணமகன் தன்னுடைய காதலியுடன் மாயமானதாகவும் கூறிய நிலையில் இதனை கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருமணமும் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மணமகள் வீட்டார் போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் காதலியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.