தமிழகத்தில் பள்ளி பொதுத்தேர்வில் மாற்றம்… இனிமேல் இது கட்டாயம்… அரசு திடீர் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 5, 2025

Spread the love

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு 80 சதவீதம் வருகை தந்த தனி தேர்வர்கள் மட்டுமே செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது. தனித் தேர்வர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் சென்று பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். 80 சதவீதம் வருகை இல்லாதவர்களுக்கு இனி அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.