அமெரிக்கா இல்லனா இந்த உலகமே இருக்காது… எல்லா உயிர்களும் செத்து போயிடும்… டிரம்ப் பெருமிதம்…!!

By Divyamayakannan on புரட்டாதி 5, 2025

Spread the love

அமெரிக்காவை நம்பிதான் உலக நாடுகள் அனைத்தும் இருக்கிறது என்று டிரம்ப் கூறியுள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் ஆட்சிக் காலத்திலேயே பொருளாதாரத்தில் மிகப்பெரிய இடத்தில் அமெரிக்காவை மாற்றினேன். தற்போது ஜோ நிர்வாகம் செய்த செயல்களால் பொருளாதாரம் சீர்யலிய தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு வரி மூலமாகவே அதிகளவு பணம் வருகிறது. நமக்கு அனைத்தையும் வரிதான் பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் அனைத்துமே அழிந்து விடும்.

சமூக ஊடகத்தில் பேட்டியளித்தவர் வரி மூலம் சீனா, இந்தியா, பிரேசில் நாடுகள் நம்மளை அழிக்க வருகிறது. அவர்கள் செய்ததை விட வரி சிறந்தது. மனிதர்களை விட வரியை நான் நன்றாக புரிந்து கொண்டு உள்ளேன் என்று கூறியிருந்தார். இந்த அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியாவே திகழ்கிறது. என்னிடம் இனிமேல் வரி இருக்காது என்று தெரிவித்திருந்தனர் மற்றும் அவர்கள் மீது வரி விதிக்கவில்லை என்றால் சலுகை கிடைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர்.