தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் எதிரொளியாக செங்கோட்டையன் தற்போது ஈபிஎஸ்-க்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் கெடு கொடுத்து விட்டதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அந்தக் கூட்டணியில் இருந்து ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் விலகிய நிலையில் இப்போது செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறியுள்ளார். அந்தக் கூட்டணி மூழ்குகின்ற கப்பல் என்பதால் ஒவ்வொருவராக விலகி செல்வதாகவும் பாஜக மொத்தமாக அதிமுகவை அழித்துவிடும் என்றும் செல்வபெருந்ததை கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
