அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பதில் இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் ஈடுபட்டு வரும் நிலையில் NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் .
கட்சியில் இருந்து விலகியவர்கள், எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் கட்சியில் இணைய தயாராக இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நினைக்கிறாங்க. 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என அறிவித்துள்ளார்.
