BIG BREAKING: “இதுதான் என் முடிவு” எச்சரிக்கையோடு அறிவித்தார் செங்கோட்டையன்… கடும் ஷாக்கில் எடப்பாடி..!!

By Soundarya on புரட்டாதி 5, 2025

Spread the love

அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பதில் இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் ஈடுபட்டு வரும் நிலையில் NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் .

கட்சியில் இருந்து விலகியவர்கள், எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் கட்சியில் இணைய தயாராக இருக்கிறார்கள். விரைந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால் ஒன்றிணைக்கும் பணிகளை எங்களில் சிலர் செய்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.