இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் தமிழ்நாட்டை சேர்ந்தோர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைக்குலியலில் கூட்டமாக சேர்த்து புதைக்கப்பட்டதாக வரலாறு உள்ளது. தற்போது மனித குலத்திற்கு எதிராக இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகி வருகின்றன. தற்போது யாழ்பாணத்தில் செம்மணி என்ற இடத்தில் வளர்ச்சிப் பணிஒன்றுக்காக தோண்டப்பட்ட குலியில் ஏராளமான மனித எலும்பு கூடுகள் தென்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த சம்பவத்தை குறித்து யாழ்ப்பாணம் கோர்ட்டில் சட்டபூர்வ மேற்பார்வையின் கீழ் அகழாய்வு நடத்தி உத்தரவு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் ஒரு பக்கம் வந்தாலும். அதில் 90 சதவீத எலும்பு கூடுகளுக்கு ஆடை இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தெரிய வருவது அவர்களை நிர்வாணமாக்கி கொலை செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாக நடக்கும் இந்த பணியில் 200-க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகளை கண்டுபிடித்து உள்ளார்களாம். 1998 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் உச்சியில் இருந்தபோது செம்மணியில் ஒரு இடத்தில் பதினைந்து உடல்களை தோண்டி எடுக்கப்பட்டனர். தற்போது 200க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை கிளப்பி வருகிறது. கடந்த மாதம் 3 மற்றும் 4 தேதியில் இலங்கை மனிதஉரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த எலும்புக்கூடுகள் அனைத்துமே சட்ட விரோதம் மற்றும் நீதிக்கு புறமாக கொலை செய்யப்பட்டவர்கள் என்று உறுதி கொடுத்துள்ளது மனித உரிமை ஆணையம். இலங்கையில் உள்ள தமிழரசு கட்சி தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரம் மற்றும் போர் குற்றங்களுக்கு ஆதாரத்தை சேர்த்துள்ளனர். நாடு முழுவதும் இலங்கைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். அதிபர் அனுர குமார திசநாயகா அவர்கள் இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
