தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு திறன் அடிப்படைலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது 3 புதிய பயிற்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்களை தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டனர். இதற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை தட்கோ நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்.
வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு
- இதற்கான பயிற்சி காலம் 3 மாதம்
- பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
- இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை
- கல்வித் தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- வருமானம் – 3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்
போர்க்லிப்ட் ஆப்பரேட்டர்
- ஒரு மாத பயிற்சி வழங்கப்படும்
- பயிற்சி முடித்தவுடன் சான்றிதழும் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்
- வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
- கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- வருமானம் – குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
நவீன தொழில்நுட்ப பயிற்சிகள்
சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 4 சிறப்பு பயிற்சிகள் பொறியியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
- ட்ரோன் தொழில்நுட்பம்: ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் பயிற்சி.
- எம்பெடெட் சென்சார் சோதனை: எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி.
- பி.சி.பி வடிவமைப்பு: பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி.
- பொறியியல் வேலைவாய்ப்பு: கோர் டெக் பிளேஸ்மென்ட் திட்டம் (Core Tech Placement Program).
வயது : 18 முதல் 35 வயது வரை.
கல்வி:
- ட்ரோன் பயிற்சிக்கு: ஏதேனும் 1 பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- மற்ற பயிற்சிகளுக்கு: ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு / பொறியியல் பட்டயப்படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
