பத்திரப்பதிவு செய்வோருக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எங்கேயும் அலைய வேண்டாம்… தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளுமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைந்த காலம் போய் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே எளிதில் வேலையை முடிக்கும் வகையில் ஆன்லைனில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. அதன்படி தற்போது தமிழகத்தில் ஆண்டுதோறும் 36 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதில் 5.5 லட்சம் உரிமை பத்திர வைப்பு எனப்படும் கடனுக்கான பிணையம் மற்றும் 3.5 லட்சம் ரசீது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் சொத்துக்கள் ஆன்லைன் மூலம் பதியும் வகையில் தமிழக பதிவுத்துறை புதிய நடவடிக்கையை கொண்டு வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சொத்து வாங்குபவர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் சொத்துக்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.