காலையிலேயே அதிர்ச்சி..! வரலாற்று சிறப்புமிக்க ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்து… சுற்றுலாபயணிகள் 15 பேர் பலி… துக்கநாளாக அறிவிப்பு..!!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

ஐரோப்பிய நாட்டில் போர்ச்சுகளின் தலைநகரம் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் ரயில் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 பேர் காயம் அடைந்து ஐந்து பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தகவல் வந்துள்ளது. இச்சம்பவத்தினால் போர்ச்சுகலில் அரசு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.