OMG: நாய் கடித்தால் இவ்வளவு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருக்கா?… முதலில் செய்ய வேண்டியது என்ன?.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்…!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

இந்தியாவில் சமீப காலமாகவே தெருநாய்கள் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. பல உயிர்களை தெரு நாய்கள் காவு வாங்கி உள்ளது. தெரு நாய்களை முகாமில் அடைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்ததை, பல நல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர். அதனால் உச்ச நீதிமன்றம் தடுப்பூசி போட்டு நாய்களை இருந்த இடத்திலே விட்டு விடலாம் என்றும், மேலும் அதிக வெறிப் பிடித்த நாயை மட்டுமே முகாமில் அடைக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

தெரு நாய்களின் பிரச்சனை வலையதளத்தில் வைரலாகி பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். தெரு நாய்கள் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். நாய்க்கடியினால் வரும்நோய்தான் ரேபிஸ். நாய் கடித்த உடனே மருத்துவமனை அணுகி நாய்க்கடி ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ரேபிஸ் நோய் உடல் முழுவதும் தாக்கி விட்டால் சிகிச்சை அளிப்பது கடினமாகும். இதனால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதுபோன்ற அபாயங்களை தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

   

தெரு நாய்கள் மட்டுமில்லாமல் வீட்டு நாய் கடித்தாலும் நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நாய் வாயில் இருக்கும் பாக்டீரியா மனித உடம்பில் உள்ள காயத்தில் பட்டால் உடலுக்குள் நுழைந்து உடலில் டெட்டனஸ் பாதிப்பு வரலாம். நாய் கடித்தால் தோளில் அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் சருமத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்றும். பாக்டீரியாக்கள் உடலின் நுழையும் போது வீக்கம், தோல் சிவப்பு மற்றும் சீல் ஆகிய பாதிப்பு ஏற்படலாம். நாய் கடித்தால் முதலில் காயத்தை நன்றாக ஓடும் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கழுவ வேண்டும். பின்பு உடனடியாக மருத்துவரை அணுகி ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் ரேபிஸ் நோய் கூட வருவதற்கு வாய்ப்பு உண்டு.