தமிழகத்தில் மின் ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் பத்தாயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மின்வாரிய ஊழியர்களுக்கு முன் பணத்தை உயர்த்துவது குறித்து வாரிய குழு ஆலோசனை நடத்தியது. அதில் 20000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு துறைக்கும் விரைவில் அறிவிப்பை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
