சமூக வலைத்தளத்தில் தினந்தோறும் ஏதோ ஒரு வீடியோ வைரலாகி கொண்டே இருக்கிறது. தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்த பிறகு, உங்களால் நிச்சயம் சிரிப்பை அடக்க முடியாது.
அந்த வீடியோவில், Free Wi-Fi என்று எழுதப்பட்ட QR code ஒரு கார்போர்ட் அட்டையின் மீது ஒட்டப்பட்டு இருந்தது. அதைக் கண்டதும் wi-fi இலவசமா கிடைக்கிறது என்று நினைத்த நபர், ஓடி வந்து தனது மொபைலில் அந்த QR codeஐ ஸ்கேன் செய்த பொழுது, சுவரின் மறுபுறம் மறைந்திருந்த மர்ம நபர், மொபைல் போனை நொடி பொழுதில் பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
சிரிப்பைத் தூண்டும் இந்த வீடியோ, பிரபல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் கமெண்ட்களை பெற்றுள்ளது. அந்த வகையில் “Free Wi-Fi எடுக்க போய், செல்போனை தொலைச்சுட்டாரு பாவம்!!”, “இதுதான் பக்கா ஃப்ரீ திருட்டு” என்று பல இணையவாசிகள் தங்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இனி எவரும் ஃப்ரீ என்று பார்த்தவுடன் ஓடுவதற்கு முன், ஒன்றுக்கு இருமுறை யோசிக்க வேண்டியது மிக அவசியம்.
View this post on Instagram
