கடந்த 2021 ஆம் ஆண்டு கூகுளில் வேலை பெற்றவர் தான் ஜிம் டாங், 27. அவருடைய உழைப்பின் காரணமாகவே மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 40 வயதில் ஓய்வு பெற்றார். வருடத்திற்கு ரூபாய் 2.5 கோடி சம்பளம் கிடைத்ததாம். அதனால் எதிர்காலத்தை பற்றி பயம் இல்லை என்று கூறியுள்ளார். இது போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிவதற்கு நிறைய பேர் ஆவலாக இருந்தாலும் வேலை கிடைப்பதில்லை. அதிர்ஷ்டமாக இவருக்கு இந்த வேலை கிடைத்தது இருப்பினும் வேலையை விட்டு விலகியது ஆச்சரியமாக உள்ளது.
காலப்போக்கில் அவருக்கு இந்த வேலை போரடித்து விட்டது. நீண்ட நேரம் ஒரே வேலையை பார்ப்பதினால் அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்ட தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமத்தை மேற்கொண்டு வந்துள்ளார். இடையில் ஏற்பட்ட காதல் தோல்வி அதிக மன அழுத்தத்தில் தள்ளி உள்ளது. அந்தப் பெண்ணைப் பற்றி அவர் ஏதும் கூறவில்லை, அதனால் என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என்று மட்டும் கூறினார்.
