சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் 15, 2023 ஆண்டு முதல் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மோதலை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச நாடுகள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், சூடன் நாட்டின் தார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரவையில் சிக்கி, ஒரு கிராமமே மண்ணில் புதைந்துள்ளது. இதிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார் என தெரிய வந்தது. சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது.
