எல்பிஜி சிலிண்டர் பொதுவாக வீடுகளில் சமையலுக்காக பயன்படுத்துவது. ஐந்து கிலோ மற்றும் 1.2 கிலோ எனப்பல அளவில் கிடைக்கும். சிலிண்டரில் சீல் மற்றும் எடை சரியாக இருக்கிறதா என்று கவனிப்பார்கள். சிலிண்டரில் கைப்பிடிக்கு கீழ் ஒரு குறியீடு இருக்கும். அது எக்ஸ்பைரி டேட் அல்ல சோதனை தேதி என்று அழைக்கப்படும். BSI 3196 தரநிலைகளின் படித் தயாரிக்கப்படுகின்றன. நீண்ட காலம் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிண்டர் சோதனைக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு சோதிக்க வேண்டும். சோதனை எப்போது செய்ய வேண்டும் என்பது தெரியுமா? A25,B26,C27 இதுப் போன்ற குறியீடுகள் சிலிண்டரில் இருக்கும்.
A என்றால் ஜனவரி முதல் மார்ச் மாத இடைக்காலம்.B என்றால் ஏப்ரல் முதல் ஜூன் மாத இடைக்காலம். C என்றால் ஜூலை முதல் செப்டம்பர் மாத இடைக்காலம், D என்றால் அக்டோபர் முதல் டிசம்பர் மாத இடைக்காலம். இந்த இடைக்காலத்தில் சிலிண்டரை சோதனை செய்வார்களாம் சோதனை தேதிக்காக தான் இது போன்ற குறியீடுகளை பயன்படுத்துகிறார்கள். சோதனையில் தோல்வி அடைந்தால் சிலிண்டர் மாற்றப்படும். தேர்ச்சி அடைந்தால் மீண்டும் வண்ணம் தீட்டி புதிய சோதனை தேதியை எழுதுவார்கள். சந்தைக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சிலிண்டரிலும் இதுபோன்று குறியீடு கண்டிப்பாக இருக்கும். ஆகவே புதிய சிலிண்டர் வாங்கினால் சோதனை தேதியை சரிப்பாருங்கள். சோதனை தேதிக்குள் இருக்கும் சிலிண்டர் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். துருப்பிடித்த அல்லது சேதமடைந்து சிலிண்டர் வந்தால் நீங்கள் அதை வாங்காதீர்கள்.
