3 முறை திருமணம் செய்த நபர்….! “4-வதாக இளம் பெண்ணுடன் லிவ்-இன் வாழ்க்கை…” பட்ட பகலில் நடுரோட்டில் துடிதுடிக்க கொன்ற கொடூரம்…..!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2025

Spread the love

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த விட்டல் என்பவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்து அவர்களை பிரிந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விட்டலுக்கு வனஜாக்சி(35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணும் ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து அவர்களை விட்டு பிரிந்தவர். சில ஆண்டுகளாக விட்டலும் வனஜாக்சியும் லிவ்-இன் முறையில் வாழ்ந்தனர்.

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விட்டல் தினமும் வனஜாக்சியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் விட்டலை விட்டு பிரிந்து செல்ல வனஜாக்சி முடிவெடுத்தார். அந்த சமயம் கன்னட அமைப்பு ஒன்றின் உறுப்பினரான மாரியப்பா என்பவருடன் வனஜாக்சிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

   

இந்த நிலையில் வனஜாக்சி மாரியப்பாவுடன் கோயிலுக்கு சென்ற போது பின்னால் விட்டல் அவர்களை துரத்தி சென்று சிக்னலில் காரை வழிமறித்து திடீரென பெட்ரோலை எடுத்து காருக்குள் ஊற்றினார். உடனே சுதாரித்துக் கொண்டு வனஜாக்கியும் மாரியப்பாவும் கீழே இறங்கி வந்தனர்.

   

பின்னர் விட்டல் வனஜாக்சியை ஓட ஓட விரட்டி சென்று சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை வைத்து வனஜாக்சி மீது தீப்பற்ற வைத்தார். இதனால் வனஜாசி, அவரை காப்பாற்ற ஓடி வந்த மற்றொரு நபர் மீதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

அங்கு சிகிச்சை பலனின்றி வனஜாக்சி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற நபரை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விட்டலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.