சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது, கல்லூரி காலகட்டத்தில் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பேசி உள்ளார்.
அதில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நபர் என்னிடம் நேரடியாக வந்து ரேட் பேசினார். நான் ஹலோ நான் லயோலா கல்லூரியில் படிக்கிறேன் என்று கூறியதும் இருந்துட்டு போ உன் ரேட் என்னன்னு சொல்லு என கேட்டார். நான் கல்லூரி மாணவி என பலமுறை கூறியும் அதனை புரிந்து கொள்ளும் மன நிலைமையில் அந்த நபர் இல்லை.
அந்த அளவுக்கு அவர் மது குடித்து இருந்தார். அப்போது தனியாக இருந்த நான் ஒரு கட்டத்தை மாடியில் இருந்து கீழே குதித்து விடலாம் என நினைத்தேன். அப்போது ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து என்னை காப்பாற்றினார். என் வாழ்க்கையில் மிகவும் மோசமான அந்த சம்பவத்தை என்னால் இன்றும் மறக்க முடியாது என காயத்ரி கூறியுள்ளார்.
