காதலியை பிரிந்த தவிப்பு… பைசன் படத்தின் முதல் சிங்கிள் “தீக்கொளுத்தி” பாடல் வெளியீடு..!!

By Soundarya on புரட்டாதி 1, 2025

Spread the love

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவிக்ரம் நடித்துள்ள படம் பைசன். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாமன்னன், வாழை படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு பைசன் காளமாடன்  என்ற இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் அனுபமா பரமேஸ்வரன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி என்னும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.