தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி வேளாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்ட விதியின்படி இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு குழுவை மறுக்கட்டமைப்பு செய்தனர். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரப்படும். 2024 ஆண்டில் மறு கட்டமைப்பு செய்தனர். கடந்த ஜூலை 25ஆம் தேதி குழு கூட்டம் நடைபெற்றது, மேலும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்தையும் தீர்மானம் செய்து நிறைவேற்றினார்.
இதற்கிடையே எஸ்எம்சி உறுப்பினர்கள் வருகையை பதிவு செய்யும் முறையில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குழு கூட்டத்திற்கு வருகை மற்றும் வருகை தராதவர்கள் ஆகியவற்றுடன் கூடுதலாக காலியிடம் என வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி முடிவடைந்ததால் கலந்து கொள்ள தேவையில்லை. ஒரு வேலை அவர்கள் விரும்பினால் கூட்டத்தில் பங்கேற்கலாம். அவர்களுடைய வருகை பதிவு செய்யத் தேவையில்லை. அதற்கு மாறாக காலியிடம் இருப்பதாக குறிப்பிட வேண்டும். சிறந்த முறையில் குழு கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
