பெண்கள் முழங்கால் தெரிய டிரெஸ் போட்டால் தான் வாய்ப்பு கொடுக்காங்க… ஆனால் என்னால் முடியாது… நடிகை கீர்த்தி பட் ஓபன் டாக்..!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

சென்னை, தினமும் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. நகைச்சுவை, நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக சீரியல் நடிகைகள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களை இடம் பெறுகின்றனர். தெலுங்கு பிக் பாஸில் புகழ்பெற்ற கீர்த்தி பட் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும், தொகுப்பாளராக பங்கேற்கவில்லை.

சமீபத்தில் கீர்த்தி பட் காரணம் கூறியுள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமென்றால் பெண்கள் கவர்ச்சியாக முழங்கால் வரை உடையை அணிந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். என்னால் அது போன்று எதுவும் செய்ய முடியாது, வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. என் வாழ்க்கையில் சில விதிமுறைகள் இருப்பதால் இதுபோன்ற நான் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். கார்த்திகை தீபம், மனசிச்சிச்சுடு என்ற சீரியலில் அறிமுகமாகி பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்றார். இவருடைய தனித்துவமான நடிப்பால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெற்று இருந்தார்.