சுக்ராத்ய ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்… செல்வம் பெருகும், நினைத்த காரியத்தை அடைவீர்கள்..!!

By Soundarya on புரட்டாதி 1, 2025

Spread the love

2025 அக்டோபர் 17 அன்று பல ராஜ யோகங்களில் சுக்கிரவாதித்ய ராஜயோகமானது சூரியன் துலாம் ராசியில் 13.36 மணிக்கு சஞ்சரிப்பதால் நடைபெறப்போகிறது. அதன்பிறகு சுக்கிரன் நவம்பர் 2 அன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் காதல், திருமண வாழ்க்கை, செல்வம், ஆடம்பரம் போன்றவற்றிற்கு ஆதாரமாக இருப்பவர். எனவே இந்த ராஜயோகத்தை எந்த ராசிக்காரர் அனுபவிக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராமல் பல நன்மைகள் கிடைக்கும். திடீர் ஆதாயம் கிடைக்கும். பல வழிகள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். இதனால் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் கிடைக்கும். முதலீடு செய்ய நினைப்பது லாபத்தை அதிகரிக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

   

கடக ராசிக்காரர்களுக்கு எல்லாமே நேர்மையான பலனை கொடுக்கும். செல்வ செழிப்போடு வளரும். நீங்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

   

தனுசு ராசிக்காரர்களுக்கு அபரிதமான வளர்ச்சியை சுக்கிரனால் கிடைக்கப்போகிறது. இந்த ராஜயோகம் உங்களுடைய வருமானம் மற்றும் லாப வீட்டில் உருவாகிறது. இந்த காரணத்தால் உங்களுடைய வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். திடீரென்று பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியத்தை அடைய சுக்கிரன் உதவியாக இருப்பார்.