“காசு கொடுத்து தான் வராங்க”… அதிமுகவுடன் கூட்டணி… முதுகில் குத்திய இபிஎஸ்.. புதிய பரபரப்பை கிளப்பிய பிரேமலதா…!

By Nanthini on ஆவணி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சென்னை தி நகரில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிவிட்டார் என்பதுதான் உண்மை. வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் எடப்பாடி எங்களை ஏமாற்றி விட்டார். மாநிலங்களவை சீட் தருவதாக கூறி முதுகில் குத்திவிட்டார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதனைப் போலவே தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். அதனால்தான் நாங்கள் ஏமாந்தோம். எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார கூட்டங்களுக்கு காசு கொடுத்த தான் ஆட்கள் அனைத்துவரப்படுகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரேமலதா கூறியுள்ளார்.