அடி தூள்.. இனி மின்னல் வேகத்தில் பறக்கலாம்… வெறும் 3 நொடியில் 100 KM வேகம் செல்லும் அதிவேக காரை அறிமுகம் செய்த டெஸ்லா..!

By Srimathi on ஆவணி 31, 2025

Spread the love

டெஸ்லா நிறுவனம் முற்றிலும் புதிய “மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்” வெளியிட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் மின்சார SUVயின் உயர் செயல்திறன் மாடலை உயிர்ப்பித்துள்ளது. ஜூனிபர் அப்டேட் என்று அழைக்கப்படும் புதிய வேரியண்ட், இப்போது டெஸ்லாவின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கப்பட்ட RWD மற்றும் நீண்ட தூர வேரியண்டாக கருதப்படுகிறது. இதன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கார்பன் ஃபைபரால் ஆன பின்புற ஸ்பாய்லர், 21-இன்ச் அராக்நிட் 2.0 அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக பிரேக் காலிப்பர்கள் உள்ளது. குறைக்கப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட காற்றியக்கவியல் அதன் நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றன.

புதிய “மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்” டூயல் மோட்டார் AWD அமைப்பு இருக்கிறது. இதில் 460bhp பவர் & 751Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது SUV மணிக்கு 0–100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் வேகமான மாடல்களில் ஒன்றாகும்.