சீச்சீ, விமானத்தில் நடுவானில் பாட்டிலில் சிறுநீர் கழித்த பயணிகள்… அதிர்ச்சி தரும் காரணத்தை கூறிய நிறுவனம்…!

By Srimathi on ஆவணி 31, 2025

Spread the love

இந்தோனேசியாவிலிருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 737 MAX 8 ரக பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது.

இந்தப் பயண நேரம் மொத்தம் 6 மணி நேரம், 4500 கிலோ மீட்டர் தொலைவு. இந்த விமானத்தின் கழிவறை பைப்பில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. அதை சரி செய்ய பணியாளர் இல்லை என்பதால், விமானம் திட்டமிட்டபடி அப்படியே டேக்ஆப் ஆனது. இதில் முதல் 3 மணி நேரம் தாக்கு பிடித்த பயணிகள், அடுத்த 3 மணி நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை என்றவுடன் பாட்டில்களில் சிறுநீர்களை கழித்துக் கொள்ளுமாறு விமான பணியாளர்கள் கூற, அவ்வாறே பயணிகள் செய்ததால் விமானம் முழுவதும் துர்நாற்றம் வீசியது.

   

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிறுவனம், போதுமான பணியாளர்கள் இல்லாததால் இவ்வாறு நடந்தது என்றும், சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பயண டிக்கெட் காண தொகையை திரும்ப கொடுத்து விடுவதாகவும், தெரிவித்தனர்.