பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகளை குறைக்கும் விதமாக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள டெலிவரி பணியாளர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தகுதி உள்ள பயனாளிகளுக்கு ரூ. 20000 மானியம் வழங்கப்படும். இதில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பதிவு செய்துள்ள 2000 உறுப்பினர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் சேர விரும்பினால், அவர்கள் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் உணவு டெலிவரி, மளிகை பொருள் டெலிவரி, பை டாக்ஸி போன்ற ஆன்லைன் தலை மூலம் ஆர்டர்களை பெற்று சேவை வழங்கும் தொழிலாளராக இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் இரண்டு படிநிலைகள் உள்ளது. முதலில் நலவாரியத்தில் உறுப்பினராகி, பின்னர் மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நல வாரியத்தில் உறுப்பினராவது எப்படி?
முதலில் `https://tnuwwb.tn.gov.in/`என்ற இணையதளத்திற்கு சென்று அதன் முகப்பு பக்கத்தில் உள்ள “புதிய விண்ணப்ப பதிவு” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, பெறப்பட்ட OTP மூலம் உள்நுழையவும். உங்களின் தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையரால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நிரந்தர பதிவு எண் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இதை உபயோகித்து, உங்கள் நலவாரிய உறுப்பினர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
நல வாரியத்தில் உறுப்பினரான பிறகு, `https://tnuwwb.tn.gov.in/` என்ற இணையதளத்திற்கு சென்று அதன் முகப்பு பக்கத்தில் உள்ள “Subsidy for eScooter” என்ற இணைப்பை கிளிக் செய்யவும். பின் உங்கள் நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். தேவையான ஆதாரங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்கு சென்று, நலவாரிய உறுப்பினர் மற்றும் மானிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
