தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IT.IM.IIT.NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் சார்ந்த மாணவியர்கள் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
மாணவர்கள் செலுத்திய அதிகபட்சம் தொகை, 2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையை அரசு வழங்குகிறது. இதில் சேர விரும்பியவர்கள், https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மத்திய மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகை பெரும் மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகையில் சேர முடியாது. மேலும் இந்த நிதியாண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அந்தக் கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் (with Bonafide Certificate) தகுதியான விண்ணப்பங்களை அவர்களின் வகுப்பு வாரியாக பிரித்து, 30/9/2025க்குள் புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 30/10/2025க்குள் புதிய (Fresh) விண்ணப்பங்களையும் அனுப்பிவைக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்,
ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம். சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி. எண்.044-29515942 மின்னஞ்சல் முகவரி – tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்,
ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.9445477817மின்னஞ்சல் முகவரி. mbcdnciitscholarship@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
