சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆசை காதலனை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹீனான் மாகாணத்தை சேர்ந்த 19 வயது ஹூவாங், 17 வயதான ஜோ என்ற பெண்ணுடன் காதல் உறவிலிருந்து உள்ளார். இருவரும் ஒன்றாக வசிக்க தொடங்கிய நிலையில் ஜோ வற்புறுத்தலால் அந்த வாலிபர் வேலை வாய்ப்புக்காக மியான்மருக்கு செல்ல திட்டமிட்டார். தன் உறவினர்களிடம் எதுவும் சொல்லாமல் அந்த வாலிபர் தனது காதலியுடன் தாய்லாந்துக்கு சென்றார். ஆனால் அங்கிருந்து அவர் மியான்மரில் உள்ள இணையவழி மோசடி கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மோசடி கும்பலிடம் அவர் நான்கு மாதங்களுக்கு அவதி பட்டதாக தெரிகிறது. அவரை அடித்து சித்திரவதை செய்ததில் செவித்திறனை இழந்துள்ளார். ஒரு நாள் எப்படியோ தொலைபேசி மூலமாக குடும்பத்தினரை தொடர்பு கொண்ட அந்த வாலிபர் தன்னுடைய நிலையை கூறியுள்ளார். தனது காதலனை மோசடி கும்பலிடம் 11 லட்சத்திற்கு அந்த பெண் விற்பனை செய்த நிலையில் தினமும் 20 மணி நேரம் வேலை செய்த அந்த வாலிபரை குடும்பத்தினர் 41 லட்சம் கொடுத்து மீட்டு உள்ளனர். காதலனை விற்பனை செய்த பணத்தில் சொகுசாக வாழ்ந்த காதலி தற்போது கம்பி எண்ணுகின்றார்.
