கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், இதைப் பற்றி பயப்பட வேண்டாம் என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கோழிக்கோடு, மூணாறு பகுதிகளில் தூய்மையற்ற நீர் நிலைகளில் குறித்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. அசுத்தமான ஏரி, குளங்களில் குளிக்கும் பொழுது, மூக்கின் வழியாக மூளைக்குச் செல்லும் அமீபா, திசுக்களை அழித்து தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம், கோமா போன்ற உடல் உபாதைகளை கொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த அமீபா உடலில் வளரும் பொழுது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனம் இழப்பது போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். மேலும் இந்த அமீபா உடலில் நுழைந்த 18 நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமீபா தொற்றை சோதனை மூலம் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது கடினமானது என கூறப்படுகிறது. இந்த அமீபா குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூளை தின்னும் அமீபா பாதிப்பு ஒரு தொற்று நோய் அல்ல, ஆதலால் பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த அமீபா தொற்று தமிழ்நாட்டில் பாதிக்கப்படவில்லை, எனினும் அதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
