நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டி அழைத்த காதலன்… ஆணுறுப்பை வெட்டி வீசிய காதலி… பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

காதல் ஜோடிகள் நெருக்கமாக இருந்த சமயத்தில் எடுத்த நிர்வாண புகைப்படங்களை காட்டி உறவுக்கு கட்டாயப்படுத்திய காதலனின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த் என்பவரும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில் பல நிர்வாண புகைப்படங்களையும் அவர்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை காட்டி தன்னுடன் மீண்டும் உறவுக்கு வரவேண்டும் என ஜஸ்வந்த் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த நபரை தனியாக ஒரு இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி ஜஸ்வந்த் சென்ற நிலையில் அவரது ஆணுறுப்பை கூர்மையான ஆயுதத்தால் அந்த பெண் அறுத்துள்ளார். இதனால் வலியால் அவர் துடித்த நிலையில் அந்தப் பெண் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அவரது ஆணுறுப்பை அறுத்துவிட்டு தப்பி சென்ற காதலியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.