திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள ராயன்புரம் பகுதியில் வசித்து வரும் மணி என்பவருடைய மகன் மோகன் (26). கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரது மகள் பவானி (24) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பவானியில் பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பவானி பெற்றோர் மீது கோபப்பட்டு கடந்த இருபதாம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கேட்டு வேதனை அடைந்த காதலன் மோகனம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெற்றோர் காதலுக்கு சம்மதிக்காததால் இளம் காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
