GOOD NEWS: வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்… உடனே நிரப்ப தமிழக அரசு உத்தரவு..!!

By Soundarya on ஆவணி 29, 2025

Spread the love

பணியமைப்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக  உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருவாய் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும் இதுவரை அக்காலிபணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மேற்காணும் காலி பணியிடங்களை நிரப்பிட மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக்கொள்ளப்படுவதாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.