தேனி மாவட்டத்தில் தகாத உறவு தொடர்பான தகராறில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கரட்டு பட்டி என்ற ஊரில் ஆண்டிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரி முறை உறவான ஆனந்த ராணி என்ற பெண்ணுடன் இவர் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்களது கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த ஊர் மக்கள் இருவரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆண்டி வேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆண்டிவேல் சிறைக்குச் சென்ற பிறகு தனியாக இருந்த ஆனந்த ராணிக்கே பழ வியாபாரியான பாலமுருகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டி வேல் ஆனந்த ராணியின் கள்ளத்தொடர்பு பற்றி அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். இதனால் பாலமுருகனிடம் அவர் தகராறு செய்த நிலையில் ஆத்திரமடைந்த பாலமுருகன் ஆண்டி வேலை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
