பள்ளி குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் அடையாளத்தை புதுப்பிப்பதற்கு கட்டாயமாக முகாம்களை நடத்தும்படி UDAI அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “பயோமெட்ரிக் எனப்படும் கருவிழி படலம் மற்றும் கைவிரல் ரேகை புதுப்பிப்பு பணியை பள்ளிகளை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பள்ளிகளுக்கு என்று பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டது. அதில் ஐந்து முதல் 15 வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை கருவிழி படலம் பதிவு செய்து புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
17 கோடி ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்காவிட்டால் பல அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பலன்கள் கிடைக்காமல் போய்விடும். குறிப்பாக நீட், ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுக்கு பெயர்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகளை பள்ளிகளில் முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
