சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் .தற்போது ஐபிஎல் போட்டியிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னைக்காக அஸ்வின் விளையாடியிருந்தார். அஸ்வின் ஓய்வு குறித்துப் பேட்டி ஒன்றும் அளித்துள்ளார். பேட்டியின் ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை கொண்டு வரும் என்று கூறியுள்ளார். பின்பு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்றோடு முடிவடைகிறது.
ஆனால் விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்றிலிருந்து தொடங்க உள்ளது. பல ஆண்டுகளாக நிறைய அற்புதமான நினைவுகளும் உறவுகளும் கிடைத்துள்ளன. ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ -கும் எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த அணி உரிமையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அஸ்வின். பிற நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
