சந்தோஷ் சுப்பிரமணியம் பட காட்சியை ரீ-கிரியேட் செய்த ஜெனிலியா-ரவிமோகன்… கெனிஷா கொடுத்த ரியாக்ஷன்.. நீங்களே பாருங்க..!!

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

நடிகர் ரவி மோகன், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘ஜெயம்’ திரைப்பட மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்தது பின்பு அவர் நடித்த அனைத்து படங்களும் மிகச் சிறப்பாக அமைந்தது. பிறகு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாட்டு காரணத்தினால் இருவரும் பிரிந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து பாடகி கெனிஷா மற்றும் ரவி மோகன் சர்ச்சையில் சிக்கினார்.

சமீபத்தில் ரவி மோகனின் சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது ரவி மோகன் புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்து உள்ளார். திறப்பு விழாவில் சினிமா நண்பர்கள், நடிகைகள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். ரவி மோகன் மற்றும் ஜெனிலியா இணைந்து வெளியான படம் தான் சந்தோஷ் சுப்பிரமணியம். திறப்பு விழாவில் பேசிய ஜெனிலியா பேசியதை கேட்டு ரவி மோகன் கண்கலங்கி விட்டார்.

   

மேலும் சந்தோஷ் சுப்ரமணியத்தில் வரும் ஒரு டயலாக்கை ஜெனிலியா மற்றும் ரவி மோகன் இருவரும் இணைந்து ரீ கிரியேட் செய்தனர். ஜெனிலியாவின் கணவரும் ரவி மோகனை வாழ்த்தி பேசியுள்ளார். ஜெனிலியா மற்றும் ரவி மோகன் மேடையில் செய்த ரொமான்ஸ் சீனை பாடகி கெனிஷா கண் கொட்டாமல் பார்த்து ரசித்தார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டது சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வெளியாகி இருப்பினும் அதில் வரும் ஒருக் காட்சியை ரீகிரியேட் செய்து அசத்தியுள்ளனர்.