பிரபல நடிகரான ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ரவி மோகன் இரண்டு திரைப்படங்களை தயாரிக்க உள்ளார்.
அதில் முதல் படம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் திரைப்படம். மற்றொன்று ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரைப்படம். இந்த படத்திற்கு ஆன் ஆர்டினரி மேன் என பெயர் வைத்துள்ளனர்.
Moments of Ravi Mohan from RMS Launch ✨#RaviMohanStudios #RMSLaunch#srminternationalrealestate @BoomCarsChennai @BrigadeGroup pic.twitter.com/uikdNIuuIi
— Ravi Mohan Studios (@RaviMohanStudio) August 26, 2025
