அட்ராசக்க…! யூட்யூபில் சாதனை படைத்த மதராஸி டிரெய்லர்…. செம குஷியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on ஆவணி 26, 2025

Spread the love

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மதராஸி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் பல மொழிகள் சேர்த்து மதராஸி திரைப்படத்தின் டிரைலர் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.