ரொம்ப ஹெல்தி நியூஸ்..! காலை உணவுத்திட்டத்தில் தினமும் ஒரு ஸ்பூன் இதை சேருங்க… முதல்வருக்கு மருத்துவர் செளமியா சுவாமிநாதன் கோரிக்கை..!!

By Soundarya on ஆவணி 26, 2025

Spread the love

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமின்றி, பசியையும் பள்ளிகள் போக்க வேண்டுமென  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கிய பிறகு பேசிய அவர், இத்திட்டத்தை தானே நேரடியாக கண்காணித்து வருவதாகவும், இந்த விரிவாக்கம் மூலம் 3.06 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இத்திட்டம் செலவு கிடையாது, சூப்பரான சமூக முதலீடு என்றும், “கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “மாணவர்கள் உணவு திட்டத்தில் தினசரி ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை சேர்க்க வேண்டும் என்று முதல்வரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். ரத்தசோகை இதன் மூலம் தடுக்க முடியும். குழந்தைகள் நலமே நாட்டின் வளம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.