தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வீர தீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. விக்ரமின் 63 வது திரைப்படமாக மண்டேலா மடோன் அஸ்வினின் படம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
பிரேம்குமார் இயக்கத்தில் ரிலீசான 96, மெய்யழகன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரேம்குமார் சொன்ன ஒன் லைன் பிடித்துப் போனதால் விக்ரம் யோசிக்காமல் அந்த கதைக்கு ஓகே சொல்லி விட்டாராம். தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விக்ரம், தான் ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதால் அதற்கு ஏற்றார் போல கதையை தயார் செய்து வருமாறு பிரேம்குமாரிடம் கூறியுள்ளார். அதனை பிரேம்குமார் ஏற்க மறுத்துள்ளார். விக்ரம் கூறுவது போல கதையை இயக்க அவருக்கு விருப்பம் இல்லையாம். இதனால் இந்த படம் டிராப் ஆக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
