புரட்சி கலைஞர் படம்னா சும்மாவா…! 3 நாளில் வசூலை வாரி குவித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம்…. எவ்ளோ தெரியுமா….?

By Devi Ramu on ஆவணி 25, 2025

Spread the love

பிரபல நடிகரான விஜயகாந்தின் 100-வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்த படம் கடந்த 1991-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்தார். கடந்த 22 ஆம் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது.

சுமார் 100 தியேட்டர்களில் திரையிடப்பட்ட கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல் நாள் 42 லட்சம் இரண்டாவது நாள் 86 லட்சம் ரூபாயும் வசூல் செய்தது. நேற்று வரை கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.