கடவுளே இப்படியா நடக்கணும்?… கணவருக்காக கல்லீரல் தானம் அளித்த பெண்… இறுதியில் இருவருமே உயிரிழந்த சோகம்…!

By Nanthini on ஆவணி 25, 2025

Spread the love

புனேவில் தன்னுடைய கணவருக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானம் அளித்த பெண் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபு கோம்கர் என்பவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மனைவி காமினி தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக அளித்துள்ளார். காமினிக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு கணவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து காமினிக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையின் அலட்சியத்தை குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். சரியான விதிமுறைகளின் படி அறுவை சிகிச்சை நடந்ததா? என விசாரணை மேற்கொள்ள வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர். இன்றைய காலத்தில் எத்தனையோ மனைவிகள் கணவர்களை பல காரணங்களுக்காக கொன்று கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கணவருக்காக இந்த பெண் செய்த தியாகம் கடைசியில் சோகத்தில் முடிந்தது பலரையும் கலங்க வைத்துள்ளது.