திருவள்ளூர் மாவட்டத்தில் வண்டு கடித்து ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே 1 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் குழந்தை வண்டு ஒன்றை பிடித்து விழுங்கியுள்ளது. உடனே குழந்தை அலறி துடித்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் வண்டை குழந்தை விழுங்கியதால் மூச்சு குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
