டான்ஸில் பட்டையை கிளப்பும் ஸ்ரீலீலா…. அதுக்கு காரணமே அந்த நடிகர் தானாம்… சுவாரசியத்தை பகிர்ந்த நடிகையின் தாய்….!!

By Devi Ramu on ஆவணி 25, 2025

Spread the love

பிரபல நடிகையான ஸ்ரீலீலா கிஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தமக்கா, குண்டூர் காரம், ஸ்கந்தா, பகவந்த் கேசரி, ஆதிகேசவா ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது தாய் ஸ்வர்ணலதா சமீபத்தில் தனது மகள் பற்றி பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, கடந்த 1997-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் ஒரு விழாவில் ஜூனியர் என்டிஆர் நடனம் ஆடினார். அங்கு நான் சென்று அவரிடம் பேசினேன். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் உங்களைப் போலவே நிச்சயமாக நடனமாட வைப்பேன் எனக் கூறினேன். அதே போல எனது மகளையும் நடன கலைஞராக்கினேன் என கூறியுள்ளார்.

   

தற்போது ஸ்ரீலீலா ரவி தேஜாவுடன் மாஸ் ஜதாரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பவன் கல்யாண் உடன் இணைந்து உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹிந்தியிலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.